Posts

Thilolkudi Magazine

Image
 #தொல்குடி_மின்னிதழ் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பட்டைய படிப்பு சேர்ந்து ஆறு மாதம் ஆகிவிட்டது  𑀢𑀫𑀺𑀵𑀺 (தமிழி) வட்டெழுத்து, கிரந்தம் என முந்தைய தமிழைப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிற வேளையில்  என்னுள் தூங்கிக் கொண்டிருந்த இதழாளன் விழித்துக் கொள்ள உருவானதுதான் #தொல்குடி மின் இதழ். ஆகஸ்ட் முதல் மாதம் தோறும் நூலேணி - புத்தக வீதி Book Street Kannikovil Raja நூலேணி பதிப்பகம்  திப்பகம்

New Book

Image
 #நூல்அறிமுகம்  நூல்: #நாட்டுப்புற_இரங்கற்பா (நாட்டுப்புறக் கல்லறையில் எழுதப்பட்ட கையறுநிலை) மொழிபெயர்ப்பு : பேராசிரியர் #இராம. #குருநாதன் பதிப்பகம்: நூலேணி பதிப்பகம்  சென்னை. 📞98412 36965 ₹100/-  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, கவிதைகளுக்குள் நுழைந்து செல்லும் போது, பேராசிரியரின் ஆங்கில ஞானத்தையும், தமிழ் அறிவையும் அறிய முடியும். மொழிபெயர்ப்பாளர் எந்தப் படைப்பாளிக்கும் துரோகம் செய்யக்கூடாது என்னும் எண்ணத்தில் ஊறிப்போய் இருப்பவர் ஒரு சிலரே. உமார்கய்யாம் பாடல்களைக் கவிமணி தமிழாக்கம் செய்திருக்கிறார். படித்துப் பார்க்கும் போதுதான் தெரியும்... உமார்கய்யாம்மைத் தேடி அலைந்து தோற்றுப் போக வேண்டியிருக்கும். ஆனால் இங்கே பேராசிரியர் இராம. குருநாதன் மொழியாக்கம்தான் செய்கிறோம் என்ற நினைப்பிலேயேயும், மூல ஆசிரியருக்கு எவ்வித துரோகமும் செய்யக்கூடாது என்ற உறுதியுடனும் செயல்பட்டதாலே, நமக்கு தாமஸ் கிரே பாமரனுக்கும் புரியும் தமிழ் மொழியில் கிடைத்திருக்கிறார். - முனைவர் பேராசிரியர் #ராஜ்ஜா  மேனாள் ஆங்கிலப் பேராசிரியர்  புதுவை அரசு கல் லூரி, புதுச்சேரி

மாடிப் பேருந்து

Image
 ஜனவரி 1997, மாடிப்பேருந்து A 18 என்ற வழிதடத்தில் பிராட்வேக்கும் வன்டலூருக்கும் இடையே இயக்கப்பட்டது. செப்டம்பர் 2008 - இல் மாடிப்பேருந்து, நெரிசலான போக்குவரத்து சாலைகளில் ஓட்டுவது சிக்கலானது என்ற காரணத்தை மேற்கோள் காட்டி, பேருந்து சேவை கைவிடப்பட்டது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் மாடிப்பேருந்து இயக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து சென்னையில் மாடிப்பேருந்து அண்ணா சாலையிலும் மற்றொன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அருகாமையில் உள்ள விமான ஓடுதளம் முடியும் இடத்திற்கு மிக சமீபத்தில் உள்ள சாலையில் இருந்து அசோக் பில்லர் வரை சிறிது காலம் இயக்கப்பட்டது. மாடிப்பேருந்து இயக்கும் பொழுது சாலையின் குறுக்கே எந்த விதமான மின்சாரக் கம்பி அல்லது தொலை தொடர்பு கம்பிகள் அல்லது வேறு வகையில் எந்தவிதமான குறுக்கீடு இருக்க கூடாது என்ற காரணத்தால் இரண்டே இரண்டு வழித்தடத்தில் மட்டும், தேர்வு செய்யப்பட்டு, மாடிப்பேருந்துகள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது...... நன்றி முகநூல் 

புத்தகத் தூதுவர்

Image
 *கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை (குறள்:789)* நம் வாழ்நாளில் நாம் பலருக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கிறோம்; நமக்குப் பலர் பரிசளிக்கிறார்கள். வாசிக்கிறோம்; வரிசையாக அடுக்கி வைக்கிறோம். ஒரு சிலர் வாசித்த நூல்களை வாசிப்போருக்குப் பரிசளிக்கிறார்கள். பெங்களூருவில் வசிக்கும் *பேராசிரியர் கதைசொல்லி தாமரைச்செல்வி* அவர்களுக்கு, *லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பித்த நூல்களையும், அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களின் நூல்களையும் பரிசாக அனுப்பியிருந்தோம்.* அவற்றைப் படித்து *Tale Tribe* நிகழ்வின் மூலம் கதைகளாக, நூல் விமர்சனமாகச் செய்து வருவதோடு தான் செல்லும் பள்ளி, கல்லூரிக்கு பரிசாக வழங்கியும் வருகிறார். அண்மையில் *கோயம்புத்தூர் CS Academy பள்ளிக்கு, கன்னிக்கோவில் இராஜா, கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ* மற்றும் சில படைப்பாளர்களின் நூல்களைக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். அவரை *லாலிபாப் சிறுவர் உலகம்* மற்றும் "நூலேணி புத்தக வீதி* வாழ்த்தி வணங்குகிறது.

Book seeds

Image
 *புத்தக விதை* எங்கெங்கு குழந்தைகள் படிக்கின்றனரோ அங்கெல்லாம் புத்தகங்கள் விதையைத் தருகின்றன. அண்மையில் குடும்பத்தினரோடு தமிழ்நாட்டுக்கு வந்த மலேசியாவை சேர்ந்த நல்லாசிரியரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். நம்மில் பலருக்குச் சந்திப்பு என்பது உற்சாகம்; எனக்கு நல்லுரம். இந்தச் சந்திப்பும் அப்படித்தான். இல்லத்துக்கு வந்திருந்தவர்களின் கரத்தில் புத்தகக் குவியலை அளித்தேன் அதைப் பிறந்த குழந்தையைப் பெறும் லாவகத்தோடு பெற்றுக் கொண்டனர். *திருமதி.புனிதா - திரு. பிரகாஷ்* இணையர் கொசுராக ஐந்தாம் ஆண்டுப் பயிலும் மாணவி *திவ்யஸ்ரீ பிரகாஷ்* இணைந்திருந்தது பெருமகிழ்ச்சி. தமிழ்நாட்டில் இருந்து விமானம் வழியாக மலேசியா சென்ற புத்தகங்கள் மலேசிய தமிழ் குழந்தைகளின் கைகளில் தவழ்ந்தது ஒளிப்படங்களின் வழியே உரமேற்றியது. கதைகள் என்ன செய்யும்? என்கிற வினாக்களுக்கு விடையே குழந்தைகளின் வாசிப்பு; கற்பனை சக்தி; கேள்விகளில் துணிவு; தன்னம்பிக்கை; தைரியம் என வாசிக்க வாசிக்கப் புத்தகங்கள் அத்தனை விதைகளையும் அவர்களின் மனதில் பரப்பும் என்பது நதியின் ஓட்டம் தானே. இந்த விதைகளை மாணவர் மனங்களில் பரப்பிய *நல்லாசிரியர் புனிதா சுப...

வாங்க தெரிஞ்சுக்கலாம்-03

Image
வணக்கம் நண்பர்களே ஒரு படைப்பாளியின் படைப்பு வெளிவந்தவுடன் அது குறித்த அறிமுகம் விமர்சனம் எனத் தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் அது உயிர்ப்புடன் இருக்கும் அந்த வகையில் அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் #நெல்லை #அன்புடன்ஆனந்தி மற்றும் பெங்களூருவில் வசிக்கும் பேராசிரியர் #தாமரைச்செல்வி இணைந்து #வாங்க #தெரிஞ்சுக்கலாம் என்ற தலைப்பில் மாதம் தோறும் #கன்னிக்கோவில்இராஜா எழுதிய சிறார் புத்தகங்களை அலச தொடங்கி இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சி குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை  பாகம்:03 #காண்டாமிருத்தின்_பேபிசோப்பு சிறார் கதைகள் குறித்து தெரிஞ்சுக்கலாம் வாங் காண்க: 01 #பிடிங்க_பிடிங்க_மயில்முட்டையைப் #பிடிங் https://www.youtube.com/live/40K77LGfJrU?feature=sha 02 #பட்டாம்பூச்சி_தேவதை https://www.youtube.com/live/DcEIg--eNz8?feature=sha Anbudan Ananth Thamarai Selvi Elamaran Perumal

Malaysia -India, Tamilnadu

Image
 *அன்புஈனும் ஆர்வம் உடைமை*milnadu *இந்தியா, தமிழ்நாடு என்றாலே அது கன்னிக்கோவில் இராஜா மாமாதான்* சென்ற வாரம் மலேசிய ஆசிரியை *திருமதி. புனிதா சுப்பிரமணியம் (தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்).* ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். மலேசிய பள்ளியில் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்வுக்காக தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்திருந்தார்களாம்.  *"நம்முடன் கலந்துரையாடல் செய்யப் போவது கன்னிக்கோவில் இராஜா மாமாவா?"* என்று புனிதா ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்டார்களாம். "இப்போது கலந்துக்க போவது மாமா இல்லை; ஒரு பள்ளி ஆசிரியர். மாமாவை இன்னொரு நாள் அழைக்கலாம்" என்று கூறியிருக்கிறார். *"ஓ. சரி"* என்று சொல்லி இருக்கிறார்கள் மாணவர்கள். "அண்ணா! எல்லோரும் உங்களை பார்க்க ஆவலாக இருக்காங்க; மாணவர்கள் மத்தியில் *இந்தியா, தமிழ்நாடு என்றாலே அது கன்னிக்கோவில் இராஜா மாமா என்பதாகவே பதிவாகிவிட்டது*" என்றார் புனிதா ஆசிரியை. இதைக் கேட்டதும் வள்ளுவப் பெருந்தகை எழுதிய *உலகப் பொதுமறை திருக்குறளின் அதிகாரம்-8 அன்புடைமை* தலைப்பில் அமைந்த திருக்குறள் ஒவ்வொன்றாக என் மனப்...