Malaysia -India, Tamilnadu

 *அன்புஈனும் ஆர்வம் உடைமை*milnadu




*இந்தியா, தமிழ்நாடு என்றாலே அது கன்னிக்கோவில் இராஜா மாமாதான்*


சென்ற வாரம் மலேசிய ஆசிரியை *திருமதி. புனிதா சுப்பிரமணியம் (தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்).* ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.


மலேசிய பள்ளியில் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்வுக்காக தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்திருந்தார்களாம்.


 *"நம்முடன் கலந்துரையாடல் செய்யப் போவது கன்னிக்கோவில் இராஜா மாமாவா?"* என்று புனிதா ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்டார்களாம்.


"இப்போது கலந்துக்க போவது மாமா இல்லை; ஒரு பள்ளி ஆசிரியர். மாமாவை இன்னொரு நாள் அழைக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.


*"ஓ. சரி"* என்று சொல்லி இருக்கிறார்கள் மாணவர்கள்.


"அண்ணா! எல்லோரும் உங்களை பார்க்க ஆவலாக இருக்காங்க; மாணவர்கள் மத்தியில் *இந்தியா, தமிழ்நாடு என்றாலே அது கன்னிக்கோவில் இராஜா மாமா என்பதாகவே பதிவாகிவிட்டது*" என்றார் புனிதா ஆசிரியை.


இதைக் கேட்டதும் வள்ளுவப் பெருந்தகை எழுதிய *உலகப் பொதுமறை திருக்குறளின் அதிகாரம்-8 அன்புடைமை* தலைப்பில் அமைந்த திருக்குறள் ஒவ்வொன்றாக என் மனப்பேழையில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01