Book seeds

 *புத்தக விதை*




எங்கெங்கு குழந்தைகள் படிக்கின்றனரோ அங்கெல்லாம் புத்தகங்கள் விதையைத் தருகின்றன.


அண்மையில் குடும்பத்தினரோடு தமிழ்நாட்டுக்கு வந்த மலேசியாவை சேர்ந்த நல்லாசிரியரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.


நம்மில் பலருக்குச் சந்திப்பு என்பது உற்சாகம்; எனக்கு நல்லுரம். இந்தச் சந்திப்பும் அப்படித்தான்.




இல்லத்துக்கு வந்திருந்தவர்களின் கரத்தில் புத்தகக் குவியலை அளித்தேன் அதைப் பிறந்த குழந்தையைப் பெறும் லாவகத்தோடு பெற்றுக் கொண்டனர். *திருமதி.புனிதா - திரு. பிரகாஷ்* இணையர் கொசுராக ஐந்தாம் ஆண்டுப் பயிலும் மாணவி *திவ்யஸ்ரீ பிரகாஷ்* இணைந்திருந்தது பெருமகிழ்ச்சி.



தமிழ்நாட்டில் இருந்து விமானம் வழியாக மலேசியா சென்ற புத்தகங்கள் மலேசிய தமிழ் குழந்தைகளின் கைகளில் தவழ்ந்தது ஒளிப்படங்களின் வழியே உரமேற்றியது.


கதைகள் என்ன செய்யும்? என்கிற வினாக்களுக்கு விடையே குழந்தைகளின் வாசிப்பு; கற்பனை சக்தி; கேள்விகளில் துணிவு; தன்னம்பிக்கை; தைரியம் என வாசிக்க வாசிக்கப் புத்தகங்கள் அத்தனை விதைகளையும் அவர்களின் மனதில் பரப்பும் என்பது நதியின் ஓட்டம் தானே.




இந்த விதைகளை மாணவர் மனங்களில் பரப்பிய *நல்லாசிரியர் புனிதா சுப்ரமணியம்* அவர்களுக்கும் புத்தகங்களின் விதைகளை மனதில் பதியமிடவுள்ள *மலேசிய மாணவச் செல்வங்களுக்கும் லாலிபாப் சிறுவர் உலகம்* சார்பாக வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01