வனதேவதையின் பச்சைத்தவளை சிறுவர் கதைகள் நூல் குறித்து

#செய்ந்நன்றியறிதல் வாசகசாலை பதிப்பித்த #வனதேவதையின் #பச்சைத்தவளை சிறுவர் கதைகள் நூல் குறித்து Ramya Storyteller பார்வை ========= மனிதர்களின் பேராசையும் பெரும் தேவையும் இயற்கையையும் அதை மட்டுமே நம்பியிருக்கும் பல உயிர்களையும் கேள்விக்குறியாகி வருகிறது இந்த நேரத்தில் நம்மைச் சுற்றியிருக்கும் உயிர்களை பாதுகாத்திட கரம் கொடுப்பது மிக மிக அவசியம். அதற்கு முதலில் அந்த உயிர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றின் தேவை இந்த பூமிக்கு எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் ஒவ்வொன்றும் அதைத்தான் நம்மிடம் கதைகள் வழியே தெரிவிக்கிறது. ஒவ்வொன்றிலும் அவற்றைப் பற்றி சொல்லப்படும் தகவல்கள் வெறும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமல்ல அவற்றை எப்படி பாதுகாக்கலாம் என்பதை உணரத்தான். அந்த வகையில் மிக எளிமையான நடையில் இயற்கையையும் உயிர்களையும் நமக்கு நெருக்கமாக அழைத்து வருகிறார் நண்பர் #கன்னிக்கோவில்ராஜா (அணிந்துரையில் #கே_யுவராஜன் குழந்தைகள் எழுத்தாளர்) #கதைகள் : 1. அப்பாவின் பாசத்துக்கு ஏங்கும் சிங்கக் குட்டிகள் 2. கேள்விகளால் குழம்பும் ஒட்டகச்சிவிங்க...