#கற்பனைக்_கோடுகளை
#ஓவியமாக்கிய_குழந்தைகள்

குழந்தைகளிடம்  கதைகளையும் பாடல்களையும் சொல்வதையே வழக்கமாக செய்து கொண்டிருந்தேன்.

 #வண்ணத்துப்பூச்சிகள் குழுவினரும் ஒரு நிகழ்ச்சிக்கு கதைகளைச் சொல்லவே அழைத்தனர்.

திரு. 'வண்ணத்துப்பூச்சி' தாமஸ் அவர்களிடம் "குழந்தைகள் கதை கேட்கும் நிலையில் இருந்து கதை எழுதும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை, பல்வேறு நிகழ்வுகளில் பார்க்கிறேன். அதனால் அவர்களுக்கு கதை எழுத பயிற்சி கொடுக்கலாம்" என்றேன்.  அவரும் சம்மதித்தார்.

இன்றைய நிகழ்வில் 'பெங்களூரு ப்ரதம்' நூலங்கடியில் இருந்து இரண்டு ஓவியமங்கள் எடுத்து கதைகளை குழந்தைகளோடு உருவாக்கினேன். அடடா! அந்த அனுபவம் பெருமகிழ்ச்சியைத் தந்தது‌. பல குழந்தைகள் கற்பனையின் எல்லைக்கே அழைத்து சென்றார்கள். ஒரு குழந்தை கதை சொல்லிக் கொண்டே ஓவியம் வரைந்தது. மற்றொரு குழந்தை படத்தை பார்த்தது கதை சொல்ல ஆரம்பித்தது.

இப்படி ஓவியத்தை பார்த்து கதை எழுதும் குழந்தைகளை ஊக்குவிக்கும்விதமாக #வண்ணத்துப்பூச்சிகள் வலைப்பூவிலும் (blogspot) அவர்கள் தானே கற்பனை செய்து எழுதுகிற கதைகளை பதிவிட சம்மதித்துள்ளார் திரு. தாமஸ் அவர்கள்.

வளரும் நாற்றுகளின் கை வண்ணத்தில் நிறைய கதைகள் உயிர்பெறும்.

இதற்கு துணைபுரிய தொடர்ந்து நிகழ்வு நடத்துகிற Manathunai Nathan Thomas Louis பாரதி பத்மாவதி Prabhu Rajendran மற்றும் குழந்தைகளுக்காக இயங்குகிற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நன்றி : StoryWeaver, Bangalore
பெற்றோர் & குழந்தைகள்

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01