சிறார் கதை எழுதுவது எப்படி



நீங்களும் கலந்து கொண்டு பயன்பெறுங்கள் நட்புகளே....!

#இணைய_வழியில்_சிறுவர்_கதை _எழுதும்_பயிலரங்கு !!!

வணக்கம் தோழமைகளே !

தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின்
தஞ்சாவூர்  மாவட்டக் கிளையின் சார்பாக

09.08.2020 அன்று மாலை 5 மணிக்கு 
 நேரலையில் சந்திப்போம் வாரீர் !!!

கவிஞர், கதையாசிரியர்,  கதை சொல்லி,  சிறுவர் இலக்கியம் படைத்துவருபவரென பன்முகத் தன்மை கொண்டவர்.

ஹைக்கூ, புதுக்கவிதை, சிறுவர் கதைகள்,  சிறுவர் பாடல்களென 30 க்கு மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர்.

சென்ற ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில் சிறுவர் இலக்கிய எழுத்தாளருக்கான விருது பெற்றவர்.

குழந்தை இலக்கிய ரத்னா விருது,  பாவேந்தர் பாரதிதாசன் விருது, இதழியல்  சாரதி விருது,   இலக்கிய சுடர்மணி விருது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட  விருதுகளுக்கு சொந்தக்காரர்.

குழந்தைகளின் இலக்கிய வாழ்வில் அக்கறையோடு செயல்பட்டு வரும் இவர்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு விளங்குபவர். 

ஒழுக்கமும் நற்பண்பும் கொண்ட நாளைய நல்ல தலைமுறையை உருவாக்குவதில் முனைப்புடன் செயலாற்றி வரும் 
கவிஞர் கன்னிக்கோயில் இராஜா அவர்கள் நேரலை வழியே சிறுவர் கதை எழுத ஆலோசனை வழங்கும் பயிலரங்கில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.

Google meet app :

https://meet.google.com/ije-yfea-zrg

தோழமைகள் அனைவரையும் நிகழ்வில் பங்கெடுக்க அன்போடு அழைக்கின்றோம்.

அனைவரும் பயனடைவீர்!

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01