குழந்தை இலக்கிய ரத்னா #வள்ளிதாசன் (எ) ஜெ.எத்திராஜன் ஐயா மறைவு இந்தியாவிலேயே தலை சிறந்த குழந்தை எழுத்தாளர் எனப் புகழ் பெற்ற அமரர் டாக்டர் . பூவண்ணன் அவர்கள் சிறுவர் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகக் காரணமாக இருந்த மூத்த குழந்தை எழுத்தாளர் ஜெ . எத்திராஜன் 1947- ல் பள்ளி மாணவராக இருந்தபோதே சிறுவருக்காக எழுதத் தொடங்கினார் . இளம் வயதிலேயே ‘ மான்’ , ‘ கரும்பு’ ஆகிய சிறுவர் வார இதழ்களுக்குத் துணை ஆசிரியராக இருந்தவர் . சிறுவருக்காக இவர் எழுதிய கதைகளும் நாவல்களும் பல புத்தகங்களாக வெளி வந்தள்ளன . இவர் எழுதிய “ ஆவணத்தின் கதை” என்னும் நூல் 1995- ல் தமிழ்நாடு அரசின் குழந்தை இலக்கியப் பரிசினைப் பெற்றது . ஏற்கனவே ‘ பண்டித ரத்னா’ என்னும் பட்டம் பெற்ற இவர், ‘ குழந்தை இலக்கிய மாமணி’ (1997), ‘ வள்ளியப்பா இலக்கிய விருது’ (2003), குழந்தை இலக்கிய ரத்னா’ (2008), ‘ குழந்தை இலக்கிய சாதனையாளர் விருது’ (2011), ‘ அருட்பணிச் செல்வர்’ , ‘ சிறந்த சமூக சேவகர்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார் குழந்தைக் கவிஞர் அமரர் அழ . வள்ளியப்பா அவ...