சிறுகதை போட்டி
நன்னன் குடி நடத்தும் மானமிகு இரா செம்மல் நினைவு சிறுகதைப் போட்டி முதற் பரிசு 1௦௦௦௦/- உருபா {பத்தாயிரம்} இரண்டாம் பரிசு 5௦௦௦/- உருபா {ஐயாயிரம்} மூன்றாம் பரிசு 3௦௦௦/- உருபா {மூன்றாயிரம்} இரண்டு ஆறுதல் பரிசுகள் [ ஒருவருக்கு ] 1௦௦௦/- உருபா {ஓராயிரம்} கீழ்க் காணப் பெறும் விதிமுறைகளுக் கிணங்க 30/04/2022 ஆம் நாளுக்குள் எமக்குக் கிடைக்கப் பெறும் கதைகளுள் ஐந்து சிறந்த கதைகளுக்கு மேற்காணப் பெறும் ஐந்து பரிசுகளும் வழங்கப்படும். " தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்னும் புற நானூற்றுப் பாடல் அடியின் கருத்து பளிச்சென்று தெரியும்படிக் கதை இருக்க வேண்டும். பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் இடம் பெறக் கூடாது. பக்க வரையறை கிடையாது. சிறுகதை இலக்கணம், மரபு ஆகியவை நன்கு அமைந்திருக்க வேண்டும். மொழிநடை எளிதாக இருக்கலாம்; ஆனால் அது தமிழாக இருக்க வேண்டும்; பிறமொழி கலப்போ வழுவோ இருக்கக் கூடாது. எழுத்து அடித்தல் திருத்தல் இன்றி தெளிவாக இருக்க வேண்டும். மூன...