Miyav raja

 


மியாவ்_ராஜா


குழந்தைகள் உலகம் மிக அழகானது. அதில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வித்தியாசம் இல்லை. அவர்கள் உலகம் கற்பனை வளம் வாய்ந்தது. அவர்களுக்குத் தான் பார்க்கும் எல்லா விசயங்களும் புதியது. அதைத் தொட்டு உணர்ந்து, உடன் பயணித்து, தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கது.

அவர்கள் உலகத்துக்குள் சிரம் தாழ்த்தி  (total surrender) நாம் சென்று விட்டால், மகிழ்வுடன் நம்மை அரவணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் காணும், வியக்கும் விசயங்களை மகிழ்வுடன் நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

வளர.. வளர.. நாம்தான் நம்முள் இருக்கும் குழந்தைத் தன்மையை மறந்து, ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். கடிவாளத்தைப் பிடித்து நிறுத்த முடியவில்லை நம்மால்! ஆனால், கன்னிக்கோவில் இராஜாவுக்கு அது இயல்பாக வருகிறது. குழந்தைகள் உலகத்தில் பட்டாம்பூச்சி போல் பயணப்பட்டு, கதைகளை அள்ளிக் கொண்டு வருகிறார்.

(கதைசொல்லி தாமரைச்செல்லி அவர்களின் வாழ்த்துரையிலிருந்து) 

நூல்: மியாவ் ராஜா (சிறார் கதைகள்)

#கன்னிக்கோவில்இராஜா 

வெளியீடு: சுவடு பதிப்பகம்

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01