புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டி-2022

 யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற இப்போட்டி, எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பெயரில், ‘புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டி-2022


’ என அறிவிக்கப்படுகிறது.


நோக்கம்

***********

புதிய படைப்பாளர்களைக் கண்டுபிடிப்பது,  படைப்புத் திறனை ஊக்குவிப்பது, படைப்பு வெளியை விரிவடையச் செய்வது, வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பது.


விதிமுறைகள்


*****************

இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.


ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப முடியும்.

நாவலின் அளவு குறைந்தபட்சம் 30000 வார்த்தைகள் முதல் 36000 வார்த்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

நாவல்கள் எந்த வகைமையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். (சமூகம், அரசியல், சூழலியல், பின்நவீனத்துவம், அறிவியல், வரலாறு, யதார்த்தவாதம் அல்லது கற்பனாவாதம், துப்பறியும் கதை உள்ளிட்ட வகைமை..)

நாவலை மின்னஞ்சலில்  யூனிகோட்  வடிவத்தில் மட்டுமே (WORD.DOC)  அனுப்ப வேண்டும்.  கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் (PDF) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

நாவல் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: puthumaipithan.award@gmail.com

படைப்பினை அனுப்புவதற்கு கடைசி நாள் ஜூன் 30 ஆம் தேதி, 2022.

போட்டி முடிவு வெளியாகும் வரை நடுவர்கள் யார் என கண்டறிவது, அவர்களோடு தொடர்பு கொள்வது என எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது


உறுதிமொழி

****************

படைப்பை அனுப்பியதில் இருந்து,  போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும்.

ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும் இருத்தல் வேண்டும்.

மேலும் படைப்பானது தனது சொந்த கற்பனையில்  உருவானது என்றும் அது, எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியும் இணைந்திருக்க வேண்டும்.


தேர்வும் பரிசும்

*********  ********

இப்போட்டியின் முடிவில்  மொத்தம் ஐந்து நாவல்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நாவலுக்கும் தலா ரூபாய் 30 ஆயிரம் வீதம் பரிசு வழங்கப்படும்.  

*நடுவர்கள் ஐந்திற்கும் குறைவான நாவல்களையே பரிசுக்குரியன எனத் தேர்ந்தெடுத்தால், அவற்றுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும். அறிவிப்பின்படியான மிச்சத் தொகை, அடுத்த போட்டிக்குரிய தொகையுடன் இணைக்கப்படும்.


*தேர்ந்தெடுக்கப்படுகிற  ஒவ்வொரு நாவலும் தனித்தனி நூலாக யாவரும் பதிப்பகத்தின் வாயிலாக பிரசுரிப்பக்கப்படும்.


******

Comments

  1. எப்படி பங்கு கொள்வது

    ReplyDelete
  2. நகைச்சுவை படைப்புகளுக்கு இடம் உண்டா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01