சிறகில்லாத சிட்டுக்குருவி

 #சிறகில்லாத_சிட்டுக்குருவி



"வணக்கம் நண்பரே! நான் சென்னை வந்து இருக்கிறேன்.. கடற்கரை சாலையில் உள்ள சாந்தோம் தேவாலயத்தின் அருகே இருக்கிறேன்" என்ற ஒரு குரல் 15 ஆண்டுகளுக்கு முன்னால் நட்பு குரலாக மாறிப்போனது.

அப்போது 

வாட்ஸ்அப் இல்லை 

முகநூல் இல்லை 

குறுஞ்செய்தி எஸ் எம் எஸ் மட்டுமே இருந்தது .

அந்த SMSஇல் "கன்னிக்கோவில் இராஜாவின் SMS இதழை" முதலில் நடத்தியவன் என்கிற பெருமை எனக்கு வாய்த்தது.

இப்படி சிறகில்லா சிட்டுக்குருவியான கவிஞர் சேகர் கண்ணன்சேகர் ஹைக்கூ இதழாகவும், கண்ணதாசன் சிறப்பு இதழாகவும் நடத்த ஆரம்பித்த காலம்.. இந்த ஊரடங்கு காலம் வரை தொடர்ந்து கொண்டே இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.

பல படைப்பாளிகளை ஏணியில் ஏற்றி அழகு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு.

இந்த ஈராயிரத்து இருபத்து இரண்டாம் ஆண்டில் (2022) நான் எழுதிய ஹைக்கூகளை #கவிச்சூரியன் மின் இதழில் பதிவு செய்திருப்பது பழைய நினைவுகளை தூண்டி விட்டது.

கவிஞருக்கும் இதழ் ஆசிரியருமான நண்பருக்கு இனிய வாழ்த்துக்கள்

தொடர்ந்து கவிஞர்களை மெருகேற்றும் இவரைப் போன்ற சிற்றிதழ் ஆசிரியர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01