சிறுகதை போட்டி

 நன்னன் குடி நடத்தும் 

மானமிகு  இரா செம்மல் நினைவு சிறுகதைப் போட்டி 


முதற் பரிசு  1௦௦௦௦/- உருபா {பத்தாயிரம்}           

இரண்டாம் பரிசு 5௦௦௦/- உருபா {ஐயாயிரம்} 

மூன்றாம் பரிசு 3௦௦௦/- உருபா {மூன்றாயிரம்} 

இரண்டு ஆறுதல் பரிசுகள் [ ஒருவருக்கு ] 1௦௦௦/- உருபா {ஓராயிரம்}

கீழ்க் காணப் பெறும் விதிமுறைகளுக் கிணங்க 30/04/2022  ஆம் நாளுக்குள் எமக்குக் கிடைக்கப் பெறும் கதைகளுள் ஐந்து சிறந்த கதைகளுக்கு மேற்காணப் பெறும் ஐந்து  பரிசுகளும் வழங்கப்படும். 


" தீதும் நன்றும் பிறர் தர வாரா" 

  என்னும் புற நானூற்றுப் பாடல் அடியின்  கருத்து பளிச்சென்று தெரியும்படிக் கதை இருக்க வேண்டும்.

 

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் இடம் பெறக் கூடாது.

பக்க வரையறை கிடையாது.

 சிறுகதை இலக்கணம், மரபு ஆகியவை நன்கு அமைந்திருக்க வேண்டும்.  


மொழிநடை எளிதாக இருக்கலாம்; ஆனால் அது தமிழாக இருக்க வேண்டும்; பிறமொழி கலப்போ வழுவோ இருக்கக் கூடாது. 

 எழுத்து அடித்தல் திருத்தல் இன்றி தெளிவாக இருக்க வேண்டும்.  மூன்று படிகள் அனுப்ப வேண்டும்.  


படிகளின் அகத்திலோ புறத்திலோ எழுதியவரின் பெயர் போன்றவை குறிப்பாகவும் இடம் பெற்று விடக் கூடாது.  

தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுத வேண்டும், மறுபுறம் அல்லது பின்புறம் எழுதக் கூடாது.


எழுதியவரின் பெயர், முகவரி, அலைபேசி எண்; புலன எண் போன்றவற்றைத் தனித்தாள் ஒன்றில் எழுதி இணைத்து அனுப்ப வேண்டும். 

ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.


படைப்பாளிகளின் புலன எண் வாயிலாக படைப்பு வந்து சேர்ந்தமை அவருக்குத் தெரிவிக்கப்படும்.  

இப் போட்டிகள் பற்றிய பிற எத் தொடர்பும் எம்மோடு கொள்ளற்க.  


போட்டிகளின் முடிவுகள் பற்றிய எந்த உரிமையும் எம்மையன்றி வேறு எவருக்கும் எந்த அளவிலும் இல்லை. 


போட்டிக்கு வந்தவற்றை நூலாக அச்சிட்டு வெளியிடும் உரிமையும் எம்மையே சாரும். 


படைப்புகளைத் திருப்பியனுப்ப இயலாது.

போட்டி முடிவுகள் சூலை ஏழாம் நாள் வெளியிடப் படும்.

பரிசுகள் சூலை முப்பதாம் நாள் நன்னன் குடி விழாவில் வழங்கப் படும்.


படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

நன்னன் குடி நடத்தும் சிறுகதைப் போட்டி

“சிறுகுடி”

22 முதல் தெரு

அரங்கராசபுரம்

சைதாப்பேட்டை

சென்னை 600015

( சைதை நீதிமன்றத்தின் பின்புறம் )

9884550166

9840659157

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01