Dinamani Book Review தினமணி நூல் புதிது

தினமணி நூல் புதிது 

அத்தினிக் காடு (சிறுவர் கதைகள்) - ச.ச. சுபவர்ஷினி பக்.: 104 | விலை: ரூ.99 வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், எண்.28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை 600 018.
பேச: 98412 36965 


10 வயதுடைய பள்ளி மாணவி தான் இந்நூலின் ஆசிரியர் மொத்தம் 15 கதைகள். 15 கதைகளுக்கான அழகிய ஓவியங்களை 7 சிறுவர்கள் தீட்டி தங்கள் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்கள்.

லில்லியின் பூனைக்குட்டி,  ராமுவின் நாய்க்குட்டி, குறும்புக்கார வாத்து,  நாயின் நண்பர்கள், புறாவுடன் ஒருநாள், ஊருக்குள் பாண்டா, பட்டாம்பூச்சியின் ரகசியம். மந்திர மரம், மரப்பெட்டி, பச்சை நிற ஆப்பிள், முயலும் என இச்சிறுமி சுபவர்ஷினி இயற்கையோடும் பறவைகளும் வீட்டு விலங்குகளோடும் பேசி மகிழ்ந்த அனுபவங்கள் கதைகளாக இருக்கின்றன.

இக்கதைகள் அனைத்தையும் மழலை மொழியில் கேட்டு மகிழ நூலில் QR CODE கூட தரப்பட்டுள்ளது. ஆமாம்... அது என்ன நூலின் பெயர் அத்தினிக் காடு? சொன்னால் சுவாரஸ்யம் போய்விடுமே.. 

வாங்கிப் படியுங்கள்.

courtesy: Dinamani Siruvarmani 12.02.2022

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01