#ChennaiBookFair2023

 #ChennaiBookFair2023 




நேற்று நண்பர் இயக்குனர் கவிஞர் #ராசிஅழகப்பன் அவர்களின் #வான்உயர்ந்தஆதுரசாலை நூல் வெளியீட்டு விழாவிற்காக #காக்கைக்கூடு (அரங்கு எண்: 589) சென்றிருந்தேன்


அங்கு புன்னகை பூ ஒன்று தனது தந்தையோடு வந்திருந்து. தனது கையில் 21ஸ்டார் போட்டு இருந்ததை ஒவ்வொன்றாக எண்ணினாள் அந்த மகிழ்வில் நானும் ஒரு ஸ்டாரை போட்டு 22 என்றேன்.


சற்று நேரத்தில் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து, அப்பாவை பார்த்து "வேண்டும்" என்றாள்


"சரி" என்றார் அப்பா.


"நான்தான் எழுதினேன்" என்றேன்


என்னை ஒரு பார்வை பார்த்தாள் தீயா


வாழ்த்தி எழுதி கையொப்பமிடச் சொன்னார் அப்பா


கையொப்பம் போட்டு தந்தேன். திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் தியா.


பில் போடும்போது அருகில் வந்த #பாவையர்மலர் இதழின் ஆசிரியர் #வான்மதி தன் பங்கிற்கு ஒரு ஸ்டாரை போட்டு 23 ஸ்டார் என்றார்.


மகிழ்ந்தாள் தியா

ஒரு இளம் வாசகியை சந்தித்த மகிழ்வில் விடைபெற்றேன்

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை