Drama day

*நல்லா_நடிங்க_பாஸ்*

*உலக_நாடக_நாள்*



அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வின் விடுமுறையில் அத்தை ஊருக்கு செல்வவேன். அங்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் நாடகம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.


ஏற்கனவே வழக்கத்தில் இருந்த நாடகத்தை எடுத்து அதில் கொஞ்சம் என் கற்பனையை இணைத்து ஊர் நண்பர்களோடு இணைந்து நடித்துக் காட்டுவேன். குழுமியிருந்த மக்களே எங்களின் பெருவாசகர்கள்.


பள்ளியில் இரண்டு முறை நாடகத்தில் நடித்த அனுபவம் உண்டு.


இலக்கியத்திற்கு வந்த பிறகு (ஆரம்பத்தில்) சிறார் நூல்களை வெளியிடும் விழாவில் குழந்தைகளை வைத்து நாடகத்தை நடத்துவேன் ..


அவ்வாறு ஒரு முறை அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு நான் எழுதிய சிறார் கதையான *கஜாவின் தாகம்* என்பதை நாடகமாக நடத்தினேன். அதில் என் குழந்தைகள் இருவரும் யானைகளாக நடித்தார்கள்.


அந்த நாடகத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியவர் *திரைப்பட இயக்குனர் எஸ்_பி_முத்துராமன்* அவர்கள். (உனக்கு இயக்குனராகத் தகுதி உண்டு என்று வாழ்த்தினார்) அதில் ஒரு பெண் யானைக்குக் குரல் கொடுத்தவர் *கவிஞர் செல்லம் பாலா அவர்களின் மனைவி.*


சன் தொலைக்காட்சியில் ஒரு நாடத்திற்கு அனைத்து தேர்விலும் வெற்றி பெற்று ஒரு சில காரணங்களால் நடிக்க இயலாமல் போனது.


சிறார் இலக்கியப் படைப்பாளர்கள் தொகுதி 5 *கவிஞர் இரா_. பன்னீர்செல்வம்* அவர்களோடு இணைந்து தொகுத்த நூல் வெளியீட்டு விழாவில் *திருவள்ளுவர்* வேடம் போட்டு குழந்தைகளோடு நடித்தது இன்னும் மகிழ்வளிக்கிறது.


இப்படிப் பல மேடைகளில் நடித்திருந்தாலும் குழந்தைகளுக்கு நாடகங்கள் எழுதி அந்த நாடகங்கள் *தினமணி சிறுவர்மணியில்* வெளிவந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


*அப்ப நானும் நடிகன் தானே*

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01