புனையினும் புல்என்னும் நட்பு

 *புனையினும் புல்என்னும் நட்பு*




கொரோனா காலத்தில் சங்க இலக்கிய ஆய்வு மன்றம் நடாத்திய நிகழ்வில் சிறார் *எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ* புத்தகத்தை ஒருவர் ஆய்வுரை செய்தார். அந்த ஆய்வுரை என் மனதுக்கு நெருக்கமானது. அதனால் அந்த அமைப்பில் தொடர்பு கொண்டு அவரின் எண் வாங்கிக் குழந்தை இலக்கியத்தின் சார்பில் அவருக்கு நன்றி சொன்னேன்.


அதன் பிறகான காலகட்டத்தில் தொடர்ந்து குழந்தை இலக்கியம் நூல்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அன்றிலிருந்து இன்று வரை *லாலிபாப் சிறார் உலகத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இயங்கி வருகிறார்.*


பெங்களூருவில் 'Tale Tribe' அமைப்பின் மூலம் தன் அண்ணி திருமதி. ஜெயந்தி அவர்களோடு இணைந்து சிறாருக்குத் தமிழ் & ஆங்கிலக் கதைகளைச் சொல்லி வருவதோடு சிறந்த நூல்களையும் அறிமுகப்படுத்துகிறார். என் பல கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி வருகிறார். அவர்தான் குழந்தைகள விரும்பும் *கதைசொல்லி தாமரைச்செல்வி* அவர்கள்.


இன்று சென்னை வந்தவரை, நான் அதிகம் விரும்பும் *நாகேஸ்வரராவ் பூங்காவில்* சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. (இந்தப் பூங்காவில் தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அமர்ந்து பல கவிதைகள் எழுதி இருக்கிறார்).


இவரின் சென்னை வருகையைக் கேள்வியுற்ற லாலிபாப் சிறுவர் உலகத்தின் இணை இயக்குனர் *கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அமெரிக்காவிலிருந்து செல்பேசி வழியாகத் தனது வாழ்த்தை தெரிவித்தது மகிழ்ச்சியைப் பரப்பியது


பெங்களூர் கதைசொல்லிக்கு லாலிபாப் சிறுவர் உலகத்தின் சமீபத்திய வரவான *எழுத்தாளர் நல்லாசிரியர் விஜயலட்சுமி* அவர்கள் எழுதிய *கர்வம் பிடித்த பூசணிக்காய்* சிறார் கதை நூலும் நான் எழுதிய *காண்டாமிருகத்தின் பேபி சோப்பு* நூலும் அளித்து வரவேற்றேன்.


நான் மகிழ்ந்ததைப் போலவே பறவைகளின் சத்தமும் எங்களை மகிழ்வித்து அந்த நேரத்தை இனிமையாக்கின.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01