நூற்றாண்டு வெளியீடுகள்

 #நூற்றாண்டு_வெளியீடுகள்

தமிழ்நாட்டில் குழந்தைக் கவிஞர் என்றாலே #அழ_வள்ளியப்பா அவர்கள்தான் குறிக்கும். அவர்களின் நூற்றாண்டு (7.11.1922 - 7.11.2021) தொடக்கம் பெருமகிழ்வை தருகிறது.
குழந்தைக்கவிஞர் பணிச்செல்வர் பி.வெங்கட்ராமன் ஐயாவிடம் இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தபோது தோன்றிய யோசனையை #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் உள்ள குழந்தைகள் ஒத்துழைப்போடு செயல்படுத்தி இருக்கிறோம்.
அழ.வள்ளியப்பா அவர்களின் பாடலை குழந்தைகள் பாடி, அதைக் காணொளியாக மாற்றி, அதனை QR codeஆக நூலில் பதிவு செய்து லாலிபாப் வெளியீடாக வெளியிடுகிறோம்.
இந்நூலுக்கு பெரும் பங்காற்றி இணைந்து தொகுத்துள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் #நெல்லைஅன்புடன்ஆனந்தி அவர்கள்.
ஏற்கனவே #நிவேதிதா_பதிப்பகம் மூலம் தம்பி உமையவன் Umayavan Ramasamy அழ.வள்ளியப்பா அவர்களின் 100 பாடல்களை #தேன்கூடு என்ற பெயரில் தொகுத்துள்ளார்.
"அழ.வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டில் அவர் குறித்த நூல்கள் வருவது என் குருவுக்கு செய்கிற மிகப் பெரிய மரியாதை" என் மூத்த தமிழறிஞர் திரு. பி.வெங்கட்ராமன் அவர்கள் கூறியிருப்பது பெரு மகிழ்வளிக்கிறது.



Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01