Miyav Raja Book Review

 

சென்னையில் ஒரு நூல் வெளியீட்டு விழா இருக்கிறது வர இயலுமா?
என்ற Lekshmi Visagan அவர்களின் குறுஞ்செய்தி அழைப்பு பார்த்து Visagan Theni அவர்கள் நடத்தியவிழாவுக்கு சென்று இருந்தேன்.
அங்கே எதிர்பாராத விதமாக ரேயின் திரைக்காவியம் நாவல் வடிவிலான #சாருலதா (எழுத்தாளர் தி. குலசேகர்) என்கிற நூலை வெளியிடும் வாய்ப்பை விசாகன் ஏற்படுத்தி தந்திருந்தார்
அந்த நிகழ்ச்சியில் அறிமுகமானவர்தான் வாசுகி தேவராஜ் அவர்கள்.
நூலேணி நூல் கொடை திட்டத்தின் கீழ் அவர் பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் அனுப்பப்பட்டன.
அதிலிருந்து ஒரு நூலை படித்து சிறப்பானதொரு மதிப்புரையை நல்கியிருக்கிறார். அவருக்கு லாலிபாப் சிறுவர் உலகத்தில் சார்பாகவும் நூலேணி நூல் கொடை திட்டத்தின் சார்பாகவும் இனிய வாழ்த்துகளை கூறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
***
#மியாவ்_ராஜா - கன்னிக்கோவில் இராஜா
************************************************
சிறு சிறு உணர்வுகள் எழுத்துகளாய் வடிவெடுப்பது சிறு கதைகள். அவை வாழ்வின் ஜன்னல். அதன் வழியே அழகிய உலகினை கண்டு மகிழலாம். கன்னிக்கோவில் இராஜா அவர்களின் "மியாவ் ராஜா" தொகுப்பும் அவ்வகையே!!
மாற்றுத்திறனாளி குழந்தையான அஸ்மியா, பூவின் வழியாக செடியுனுள் மேற்கொள்ளும் பயணம் அற்புதம். "இல்லாதது கவலை தரும். இருப்பதை வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் வெற்றியாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் விதைக்கும் கதை.
சரண் சந்திக்கும் குள்ள மனிதர்களின் கொண்டாட்டம் பொழுதுபோக்கு அம்சம்.
அந்தரத்தில் சுழலும் தங்க மீன்கள் - மீன்களோடு சுழலும் பூரணி, பேசும் மீன்கள்,கடல் குதிரைகளென கதையின் சூழலோடு சுழலாக ஆவதை தவிர்க்க முடியவில்லை.
அந்தரப்பூ மரங்கள் வளர்க்க மட்டுமல்ல எந்த ஒரு செயலிலும் அன்பான அணுகுமுறையே சிறந்தது என்று அழுத்தமாய் சொல்லும் கதை " மியாவ் ராஜா " புத்தகத்தின் தலைப்பிற்கு அத்தனை பொருத்தம்!!
மமதை கொண்ட தவளை இளவரசியின் மனப்போக்கை திருத்தும் எலிகள், மரங்கள் பெருக்குவதன் மூலம் இயற்கைக்கு உதவ முடியும் என சொல்லும் "பெயர் தெரியாத பறவை"க்கு ஒரு பெயர் வைத்திருக்கலாம் ஆசிரியர்!!
பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் " அருவெருப்பு" குணம் ஒட்டிக்கொள்கிறது என்பதை நாசூக்காக சொல்லி, பூச்சியினங்கள், விலங்குகள், பறவைகள் Biodiversity க்கு எவ்வளவு உதவிகரமாய் இருக்கும் எனவும், நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டுமெனவும் சொல்லும் கதை "வரலாறு முக்கியம் அமைச்சரே!"
பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சுழற்ச்சி முறை, அதனை தொடர்ந்து சில அறிவியல் தகவல்கள் ஆகியவற்றை நேர்த்தியாக எடுத்து சொல்லும் " பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி" அதிசயம் தான்!!
மனிதனின் காது போல இலை, உதடு போல பூ, படிக்கும் பிள்ளைகள் நீர் ஊற்றினால் மட்டுமே பூக்கும் அதிசய பூ அபாரமான கற்பனை!!
ஒவ்வொரு கதைகளிலும் குழந்தைகளுக்கு தேவையான கருத்துகளை சொல்லும் கதைகளை தேர்ந்தெடுத்து நூலாக்கியிருக்கிறார் க.கோ. ராஜா!!
வாழ்த்துகள்
தோழர்!!
நேசமுடன்
வாசுகி தேவராஜ்

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01